1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (20:12 IST)

அருண்விஜய்யின் ‘யானை’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

yaanai
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மே 6ம் தேதி யானை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தது
 
இந்த நிலையில் சற்று முன்னர் ஜூன் 17ஆம் தேதி ‘யானை’ ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘யானை’ ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை