1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:31 IST)

10000 திரையரங்குகளில் களமிறங்கிய ’ராக்கி’ பாய் – வியக்க வைக்கும் கேஜிஎப் 2 ரிலீஸ்!

கேஜிஎப் 2 திரைப்படம் இன்று 10000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ்  ஆகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று திரைப்படம் உலகம் முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. கேஜிஎப் 2 இத்தனை திரைகளில் ரிலீஸாகி இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.