ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:52 IST)

கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்துவேன்… நடிகர் வையாபுரி!

நடிகர் விவேக்கின் மரணம் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பு வந்து உயிரிழந்தது மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. இத்தனைக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் தடுப்புசிக்கும் சம்மந்தம் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் மக்களிடம் ஒரு தயக்கம் இருக்கதான் செய்கிறது.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் நண்பர் வையாபுரி தொடர்ந்து மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துவேன் எனக் கூறியுள்ளார்.