செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (07:41 IST)

திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழன் பிரசன்னாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்
 
தமிழன் பிரசன்னாவிற்கு திருமணத்தை நடத்தி வைத்த சீமான் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழன் பிரசன்னா பல நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பதும் இருப்பினும் அவரது குடும்பத்திற்கு ஒரு சோகம் நிகழ்ந்தபோது சீமான் கருத்து வேறுபாடுகளை மறந்து தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.