வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (19:40 IST)

அருள்நிதியின் ‘தேஜாவு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

tejavu2
அருள்நிதியின் ‘தேஜாவு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல நடிகர் அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அருள்நிதி நடிப்பில் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவான திரைப்படம் ‘தேஜாவு’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து விட்ட நிலையில் இந்த படம் ஜூன் ஜூலை 21ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜூலை 21-ஆம் தேதி அருள்நிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் 
 
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது