1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஜூலை 2023 (21:32 IST)

''செயற்கை நுண்ணறிவால் அணு ஆயுதப் போர் கூட உருவாகலாம்'' - ஜேம்ஸ் கேமரூன் எச்சரிக்கை

James Cameron
ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக பன்முகங்களைக் கொண்டிருக்கிறார்.

இவர், தி அபிஸ், டெர்மினேட்டர், ஜட்ஜ்மண்ட்டே,  டைட்டானிக், அவதார், அவதார் 2 ஆகிய படங்களை இயக்கி உலகக் புகழ் பெற்றுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அவதார்  2 படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில்,  இவர் இயக்கத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான டெர்மினேட்டர் படம்  வசூலை குவித்தது.

இப்படத்தில் அதி நவீன அறிவாற்றல், பூமியில்  உள்ளா மனித இனத்தை அழிப்பது போன்ற கதை இருந்தது.

இப்படத்தைப் போன்று இப்போது பரவி வரும் செயற்கை நுண்ணறிவு ஆபத்து என்று ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''இதுபற்றி நான் 1984 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் படம் மூலம் எச்சரித்தேன்.  இதை அலட்சியப்படுத்தினார்கள். செயற்கை நுண்ணறிவால்  உள்ள பாதிப்புகளில் அதிகமானது ஆயுதங்கள் உற்பத்திக்கு அதைப் பயன்படுத்துவதால் தான் உள்ளது. இதனால், அணு ஆயுதப் போர் போன்ற நிலைகூட உருவாகலாம்'' என்று எச்சரித்துள்ளார்.

இவரது இந்தக் கருத்து பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.