வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (07:19 IST)

மதராசப்பட்டாணம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் கலை இயக்குனர் மரணம்- திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் முன்னணி கலை இயக்குனர்களில் ஒருவரான சந்தானம் நேற்று மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டணம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் கலை இயக்குனர் சந்தானம்.  சமீபத்தில் வெளியான சர்கார் மற்றும் தர்பார் ஆகிய படங்களில் பணியாற்றிய அவர் தற்போது வரலாற்று கால படமான 1947 ஆகஸ்ட் 16 என்ற படத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சந்தானத்துக்கு வயது 50.