புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (22:12 IST)

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

Armstrong Death
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், பதற்றம் காரணமாக சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வந்தார். இன்று இரவு 7 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங்,  கிரீம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 
இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியினர் பலரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.  அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோஷங்களை எழுப்பி வருவதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும்  பதற்றம் காரணமாக பெரம்பூர், செம்பியம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.