1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (09:00 IST)

லியோ படத்தில் அர்ஜுனுக்கு வித்தியாசமான மேக்கப்… லுக் டெஸ்ட் எடுத்த லோகேஷ்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இதுவரை படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் ஒரு நாள் கூட, ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லையாம். அதனால் படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது. இந்நிலையில் இப்போது அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அர்ஜுனுக்காக இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தை வடிவமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதற்கான லுக் டெஸ்ட்டும் சமீபத்தில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.