1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 மே 2023 (08:42 IST)

லியோ படத்தில் என் கேரக்டர் இதுதான்… உணமைய போட்டுடைத்த கௌதம்!

விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர்-19ம் தேதியன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள கௌதம் மேனன் “விக்ரம் படத்திலேயே என்னை நடிக்க சொல்லி லோகேஷ் கேட்டார். ஆனால் அது நடக்கவில்லை. லியோ படம் ஒப்பந்தம் ஆனதும் முதலில் எனக்குதான் அழைத்தார். ஒரு முக்கியமான கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். அந்த பாத்திரம் பற்றி சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. படத்தில் விஜய் கூடவே பயணிக்கும் கதாபாத்திரம் என்னுடையது” என உண்மையைக் கூறியுள்ளார்.