1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Arjun das debuting in malayala cinema

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்!

அர்ஜுன் தாஸ்
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. அவர் கதாநாயகனாக நடித்த, வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’ படம் பாராட்டுகளைப் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் தமிழை தாண்டியும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அர்ஜுன் தாஸ் அடுத்து மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ’ஜூன்’ மற்றும் ‘மதுரம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அகமது கபீர் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!