1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (11:35 IST)

குட்டி ஸ்டோரி பாடலுக்கு கியூட் டான்ஸ் போட்ட அர்ச்சனா மகள் - வீடியோ!

லோகேஷ் கானகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. தற்போது வரை 48 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடல் அனைவரது பேவரைட் பிலே லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், டிக் டாக் வீடியோ என அனைத்திலும் ரெக்க கட்டி பறக்கும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பல்வேறு திரைப்படங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வந்ததனர். இந்நிலையில் தற்போது 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆங்கரான அர்ச்சனாவின் மகள் சாரா குட்டி ஸ்டோரி பாடலுக்கு சூப்பராக நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அர்ச்சனாவின் இன்ஸ்டா கமெண்ட் பாக்ஸ் ரொம்பி வழிகிறது. சாரா அவரது அம்மாவுடன் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

❣️❣️lots of love to dearest Thalapathy and dearest #anirudhravichander

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on