ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:08 IST)

மவுத் டாக்கால் மந்தமாகும் அரண்மனை 3!

அரண்மனை 3 மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெளியான பின்னர் மோசமான விமர்சனங்களால் வியாபாரம் மந்தமாகியுள்ளது.

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்றாவது படம் இது. இரண்டாவது படம் வெளிவந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.

சார்பட்டா வெற்றிக்குப் பின்னர் ஆர்யா நடிக்கும் வெற்றி என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதையொட்டி முதல் கூட்டமும் ஏகபோகமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்து ஏமாந்த ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே வெளியில் நிற்பவர்களிடம் படம் பார்ப்பது நேர விரயம் எனப் புலம்பி செல்கிறார்களாம். இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் கூட்டம் குறைந்து வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டதாம்.