ஏ.ஆர். ரஹ்மானின் கனவுப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

rahman
Last Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (14:57 IST)
ஆஸ்கார் விருதுவென்ற ஏ,ஆர் ரஹ்மானின் கனவுப்படம் 99. இப்படத்திற்கு அவர் கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ளார். 
இப்படத்தில் லிசாரே, மனீஷா கொய்ராலா, ரஞ்சித், பெரோத்,  ஆகியோர் நடித்துள்ளனர்.விஸ்வகேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.  ரஹ்மானின் ஒய்.எம்.மூவீஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
 
இப்படத்தின் கதையானது, மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்து ஒருவன் இசையமைப்பாளர் ஆவதுதான் என்று கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
rahman
நான் முதன்முதலாகத் தயாரித்து, வசனம் எழுதியுள்ள 99 படத்தின் பாடல் ரிலீஸ் தேதியை கூறுவதில் மகிழ்கிறேன்.
 
எனது கம்பெனி ஒய்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள சிறப்பான தருணம்.
rahman
’’99 சாங்ஸ்’’ படம் வரும் ஜீன் 21 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும்  என்றும் இன்னும்  சில நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
உங்களுடைய ஆதரவும், ஊக்குவிப்பும் எனக்குத் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 
4 வருடங்களுக்கு முன்னரே இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :