இந்தியன் 2 படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையைப் பயன்படுத்த அனுமதி?
இந்தியன் 2 படத்தில் தன் இசையைப் பயன்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஷங்கர். சில ஆண்டுகளுக்கு முன் இவர் இயக்கத்தில், கமல்- மணிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான படம் இந்தியன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் காரணமாக அமைந்தன.
இந்த நிலையில்,விக்ரம் வெற்றிக்குப்பின், கமல்- ஷங்கர்- உதய நிதி கூட்டணியில் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்தியன்2 படத்தில் தன் இசையைப் பயன்படுத்திக் கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.