புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:18 IST)

பெரியவங்க சண்ட போட்டாலும் நாங்க கண்டுக்க மாட்டோம்… வெங்கட்பிரபு & பிரேம்ஜி உடனான நட்பு குறித்து மனம் திறந்த யுவன்!

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இயங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இசையமைத்த பல பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அவரிடம் இருந்து நல்ல பாடல்கள் அதிகமாக  வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் அவரால் தன்னுடைய பழைய பாடல்களுக்கு ஈடாக பாடல்கள் கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சமீபத்தில் அவர் இசையமைத்த கோட் படத்தின் பாடல்களும் இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் யுவன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய குடும்ப விஷயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தனது சகோதரர்களான வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோருடனான உறவு குறித்து பேசியுள்ளார்.

அதில் “ஒருமுறை என் அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இடையே சண்டை வந்து பேசாமல் இருந்தனர். ஆனால் அப்போது கூட நான் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டுதான் இருந்தேன். பெரியவர்கள் சண்டை போட்டாலும் அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.