வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:44 IST)

த்ரிஷாவுக்கு ஒரு குத்துசாங்.. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த சூப்பர் பாடல்.. எந்த படத்திற்கு?

நடிகை த்ரிஷாவின் அடுத்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஒரு புத்தம் புதிய குத்துப்பாடலை கம்போஸ் செய்திருப்பதாகவும், அந்த பாடலின் நடன காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தின் இறுதிக்குள் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் முடிக்க உள்ளதாகவும், அடுத்த மாதம் கமல்ஹாசன் வெளிநாடு சென்று ஏ.ஐ.  டெக்னாலஜி படிப்பதற்காக புறப்பட உள்ளதால், அவருடைய காட்சிகளை விரைவாக படமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கமல் மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள சண்டைக் காட்சிகள் சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதாகவும், அந்த காட்சி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஒரு அசத்தலான பார்ட்டி பாடல்  கம்போஸ் செய்திருப்பதாகவும், இந்த பாடலுக்கு  த்ரிஷா நடனம் ஆடிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக, ‘தக்லைஃப்’ படக்குழு அடுத்த மாதம் கோவாவுக்கு சென்று சிம்பு மற்றும் த்ரிஷா நடிக்கும் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

Edited by Siva