1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2020 (22:00 IST)

ராதிகாவின் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு இன்னொரு நட்சத்திரம்!

ஏற்கனவே ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதியின் குடும்பத்திலிருந்து ராதிகா, சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரையுலகில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு நட்சத்திரம் உருவாகியிருக்கிறது
 
ராதிகா சரத்குமாரின் மகனான ராகுல் சரத் விரைவில் சினிமாவுக்கு வர இருக்கிறார். இவர் தற்போது ஒரு மியூசிக் ஆல்பம் ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும், அந்த ஆல்பத்தில் உள்ள பாடலை அவரே இசையமைத்து, எழுதி, பாடி, நடித்து உள்ளதாகவும் ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த மியூசிக் வீடியோவின் டிரெய்லரை வெளியிட்டு உள்ள ராதிகா விரைவில் முழு மியூசிக் வீடியோ வெளிவரும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ராதிகா சரத்குமாரின் மகனான ராகுல் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மியூசிக் வீடியோ வெற்றி பெற ராதிகா மற்றும் சரத்குமாரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்