ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (18:04 IST)

அறம் படத்தில் நடிக்க நயன்தாரா சொல்லிய காரணம் தெரியுமா?

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கும் படம் 'அறம்'. கடந்த 10ஆம் தேதி வெளியாகி, மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



அரசியல் பற்றியும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறை பற்றியும் ஆழமாகப்  பேசியிருக்கும் அறம் படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். அறம் படத்தில் நயன்தாராவின் நடிப்பையும், வலிமையாகச் சொல்லப்பட்ட வசனங்களையும் பலர் பாராட்டியிருக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு இணையாக மாஸ் படங்கள் கொடுத்து கலக்கி வருபவர் நயன்தாரா.
 
இயக்குநர் கோபி போட்டி ஒன்றில் அறம் படம் தேர்ந்தெடுக்கும் போது நயன்தாராவின் நிலை பற்றி தெரிவித்துள்ளார்.  படத்தின்  கதையை சொன்னபோது, அதனை நன்றாக உணர்ந்த நயன்தாரா பல தயாரிப்பாளர்களின் படங்களை தாண்டி இப்படத்தில் நடிக்க  முக்கிய ஆர்வம் காட்டினாராம். கதை பற்றி பேச அவர் வீட்டிற்கு சென்றபோது, நயன்தாரா கதவை திறந்துகாட்டி இவர்கள் எல்லாம் என்னுடைய தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முதலில் நான் உங்களுடைய படத்தில் நடிக்கிறேன்  என கூறினார். இவ்வாறு நயன் தார கூறியதாக இயக்குநர் கோபி நயனார் தெரிவித்துள்ளார்.