1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (10:02 IST)

இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்ட பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன் கார்த்திகேயா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில்  தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்திகேயா 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது “இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடந்த போது எனக்கு அடிபட்டது. அதனால் என்னால் இறுதிநாள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதற்கான நான் இயக்குனரிடம் இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.