புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (17:36 IST)

பிச்சைக்காரன் -2 படத்தின் #ANTIBIKILI தீம் பாடல் ரிலீஸ்

பிச்சைக்காரன் -2  படத்தில் இடம்பெற்றுள்ள #BIKILI       என்ற தமிழ் மற்றும்  தெலுங்குப் பதிப்புப் பாடல் ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் பிச்சைக்காரன் -2 படத்தை   விஜய் ஆண்டனி நடித்து  இயக்கி வருகிறார். இப்படத்தின் தமிழ் மற்றும்  தெலுங்குப் பதிப்பு தீம் பாடலான #BIKILI - ஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி, நான் #BIKILI -ன்னு யார சொல்றேன்னு புரியுதா?  எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்பாடல்   விஜய் ஆண்டனியின் யூடியூப் தளத்தில் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.