’அண்ணாத்த’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!

annathe
’அண்ணாத்த’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!
siva| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (22:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

இந்த நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின் படி ஜூன் 4-ஆம் தேதி ’அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஜூன் 4-ஆம் தேதி என்பது எஸ்பிபி அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பாடல் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :