‘அண்ணாத்த’ படப்பிடிப்பு திட்டத்தில் திடீர் மாற்றம்: சிறுத்தை சிவா முடிவு

annathe
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு திட்டத்தில் திடீர் மாற்றம்
siva| Last Modified செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (07:25 IST)
ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் தற்போது தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் கட்டமாக ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டு அதன் பின்னர் நிலைமை சீரடைந்தது ரஜினி நடிக்க வருவார் என்று கூறப்பட்டது

ஆனால் தற்போது வந்த தகவலின் படி ரஜினி இல்லாத காட்சிகள் குறைவாக இருப்பதால் அந்த காட்சிகளின் படப்பிடிப்பு நடத்த முடியாது என்றும் அதனால் ரஜினிகாந்த் எப்பொழுது படப்பிடிப்பிற்கு வர சம்மதிக்கின்றாரோ, அதன் பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சிறுத்தை சிவா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ரஜினியுடன் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :