திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (17:18 IST)

அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் கேன்சல்… சன் பிக்சர்ஸின் அதிரடி முடிவு!

ரஜினிகாந்த் மற்றும் பலர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருந்த நிலையில் அதை மீண்டும் தள்ளிவைத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது .

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதக கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்துப் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டதால் ரஜினியும் படப்பிடிப்புக்கு வர சம்மதித்தார். இந்நிலையில் இம்மாதம் 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்தது. ஆனால் இப்போது ரஜினியின் உடல்நிலையை  மனதில் கொண்டு படப்பிடிப்பைக் கேன்சல் செய்துள்ளதாம். இதற்கு எஸ்பிபி மரணம் மற்றும் விஜயகாந்தின் கொரோனா தொற்று ஆகியவையும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஒருவேளை படப்பிடிப்பு வைத்து ரஜினிக்கு ஏதாவது ஒன்று என்றால் தங்கள் நிறுவனத்துக்குதான் கெட்டப் பெயராக அமையும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.