1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (07:20 IST)

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இடம் மாற்றம்! எங்கு தெரியுமா?

ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்தை சமீபத்தில் இயக்குனர் சிவா நேரில் சென்று சந்தித்து வந்தார். இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து அடுத்த அப்டேட்டாக அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாம். முன்னதாக ஹைதராபாத்தில் நடக்க இருந்த படப்பிடிப்பு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.