1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (09:15 IST)

நீ சொல்றது எல்லாம் சிம்புவுக்குப் புரியாது… அனிதா சம்பத்தின் அடுத்த சர்ச்சை!

நடிகர் சிம்பு கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சில வாரங்களாக கலகலப்பாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தி சென்ற சிம்பு கடந்த வாரம் சற்று கோபமாக நடந்துகொண்டார். மேலும் ‘நான் ஜாலியாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு செல்லலாம் என்று விரும்புகிறேன் என்றும் ஆனால் ஒரு சிலர் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் நான் அன்பான சிம்புதான் ஆனால் என்னுடைய இன்னொரு முகம் வம்பு என்றும் அந்த முகத்தை காட்ட வைத்து விடாதீர்கள்’ என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த வார நிகழ்ச்சியில் சிம்பு நீருப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் இப்போது அவரிடம் அனிதா சம்பத் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நிரூப்பிடம் பேசும் அனிதா ‘சிம்புவுக்கு நீ பேசுவது எல்லாம் புரியாது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கக் கூட மாட்டார்’ என்று பேசியுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் அனிதாவின் வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.