செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (22:13 IST)

அவளுடைய முழு உழைப்புதான் இந்த நிலைக்கு காரணம் - அனிதா சம்பத் குறித்து கணவர் உருக்கம்!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனிதா சம்பத்திற்கு அவரது கணவர் பிரபாஸ் அவருடன் எடுத்துக்கொண்ட பொக்கிஷ புகைப்படங்களை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குட்டி என் பன்னி. மிகவும் திறமையானவள், ஆனால் அந்த பெண்ணின் ஞாபக சக்தி அதிகம், பயங்கரமான சக்தி. எதையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்வாள். அவளுடைய முழு உழைப்புதான் இந்த நிலைக்கு இந்த நிலைக்குக் காரணம். கடின உழைப்பாளி, 20 மணி நேர வேலையை கூட 24 மணி நேரத்தில் செய்ய முடியும். 
 
அவள் பண விஷயத்தில் மிகவும் சிக்கனம். அவளுக்காக 1 ரூபாய் செலவழித்தால் கூட நிறைய யோசிப்பாள். ஆனால் மற்றவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவாள். கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட விட்டுவிடாமல் உழைக்க வேண்டும். நான் பார்த்த முதல் நாள் முதல் இன்று வரை அவள் என்னை மிகவும் கவர்ந்தாள்.
இப்படி அவளை பத்தி பேச சொன்ன பேசிட்டு போலாம். அவுளோ புடிக்கும் அந்த பன்னிகுட்டிய. இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டு இந்த வருடம் ரொம்ப சிறப்ப அமையும் நீ ஆசை பட்டதெல்லாம் நடக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.