தளபதி 65 படத்தில் இருந்து முருகதாஸ் வெளியேற அனிருத்தான் காரணமா? என்னய்ய சொல்றீங்க
தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியேற இசையமைப்பாளர் அனிருத்தான் காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய் நடிக்கும் அவரின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படத்தை இயக்க முதலில் ஒப்பந்தம் ஆனவர் இயக்குனர் முருகதாஸ். ஆனால் அவர் சில பல காரணங்களால் வெளியேற இப்போது நெல்சன் இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட இசையமைப்பாளர் தமன் தூக்கப்பட்டு அவருக்கு பதில் இப்போது அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முருகதாஸின் வெளியேற்றத்துக்கு அனிருத் தான் காரணம் என சொல்லப்படுகிறது. முருகதாஸ் தன்னை விடுத்து வேறு ஒரு இசையமைப்பாளரை நியமித்ததால் விஜய்யிடம் பேசி நெல்சனை இயக்குனராக்கி முருகதாஸ் வெளியேற முக்கியக் காரணமாக இருந்தார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர். தர்பார் படத்தின் தோல்வியால் முருகதாஸ் மேல் முழு நம்பிக்கை இல்லாத விஜய்யும் அவர் வெளியேறியது குறித்து கவலைப் படவில்லையாம்.
அனிருத் முருகதாஸுடன் கத்தி மற்றும் தர்பார் ஆகிய படங்களில் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.