தொடர்புடைய செய்திகள்
- கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?
- பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!
- மோசமான விமர்சனங்கள் வந்தும் வசூலில் அள்ளும் ‘கிங்டம்’… முதல் வார இறுதி கலெக்ஷன் ரிப்போர்ட்!
- அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!
- கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!
எனக்கு சிந்தனை தடைபடும்போது சாட் ஜிபிடி-யின் உதவியை நாடுவேன்: அனிருத்
பிரபல இசையமைப்பாளர் அனிருத், தனது இசையமைப்பு பணிகளில் சில சமயங்களில் ஏற்படும் சிந்தனை தடையை கடக்க, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியை நாடுவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனிருத், "ஒரு பாடலில் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் சிந்திக்க முடியாமல் தவித்தேன். அப்போது, வேறு வழியின்றி சாட்ஜிபிடி-யின் உதவியை நாடினேன். சாட்ஜிபிடி-யிடம் சில ஐடியாக்களை கேட்டபோது, அது சில பரிந்துரைகளை கொடுத்ததாகவும், அதில் தனக்கு உகந்த ஒரு சிந்தனையை எடுத்துக்கொண்டு, பாடலை நிறைவு செய்ததாகவும் அவர் கூறினார்.
"இன்றைய தேதியில், படைப்பாற்றல் மிக்க ஒருவருக்கு சிந்தனை தடை ஏற்படும்போது, அதிலிருந்து மீள சாட்ஜிபிடி ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனிருத்தின் இந்த பேச்சு, இசையமைப்பு போன்ற கலைத்துறையிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது. இது ஒருபுறம் ஆச்சரியத்தையும், மறுபுறம் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
