1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vijay sethupathi muthu enkira kaattaan title look released

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

மணிகண்டன்
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக ஒரு வெப் சீரிஸுக்காக இணைந்தார்கள். இந்த தொடருக்கு டிஸ்னி நிதியளிக்க முதல் பிரதி அடிப்படையில் மணிகண்டன் தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிஸ்னி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த வெப் சீரிஸில் இருந்து மணிகண்டன் விலகினார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பிரச்சனைகள் முடிந்து தொடரின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. மணிகண்டன் மற்றும் ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த தொடருக்கு ‘முத்து என்கிற காட்டான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. விரைவில் இந்த தொடர் ஸ்ட்ரீம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
எனக்கு சிந்தனை தடைபடும்போது சாட் ஜிபிடி-யின் உதவியை நாடுவேன்: அனிருத்