நிஜமாகவே உங்களுக்கு 14 வயது தானா? வாய்பிளந்த ரசிகர்கள்!
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கர்நாடாக மாநில எல்லையை ஒட்டி இருக்கும் புனித மேரிஸ் தீவின் கடற்கரையில் நின்ற படி அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு 14 வயது தானா என வாய் பிளந்து வருகின்றனர்.