புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:08 IST)

கடற்கரையில் குழந்தை போல துள்ளி விளையாடும் ஆண்ட்ரியா! வைரல் ஆகும் போட்டோஷூட்!

தொடர்ந்து பல திறமையான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல், பாடல் எழுதுதல் மற்றும் டப்பிங் குரல் கொடுத்தல் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்.

கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் அவர் பாலி கடல்கரையில் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்களைப் பகிர, அது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.