1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (09:28 IST)

வித்தியாசமான பிங்க் நிற உடையில் செம்ம ஃபன் மோடில் ஆண்ட்ரியா!

தொடர்ந்து பல திறமையான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல், பாடல் எழுதுதல் மற்றும் டப்பிங் குரல் கொடுத்தல் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்.

கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் மலேசியாவில் நடக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்காக சென்றுள்ள அவர், அங்கு இருந்தபடி வித்தியாசமான ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.