திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:18 IST)

ஓடிடியில் ரிலீஸாகும் அந்தாதூன் ரீமேக்!

அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது படப்பிடிப்பெல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார். அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கேள்வியாக இருந்தது.

தெலுங்கில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அதற்காக பெருந்தொகை ஒன்றையும் சம்பளமாக தர தயாராக இருந்துள்ளனர். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மறுத்த நிலையில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.