செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:33 IST)

பேக் டு த ரூட்ஸ்… எழுத்தாளராக தமன்னாவின் முதல் புத்தகம்!

நடிகை தமன்னா எழுதியுள்ள முதல் புத்தகம் வெளியாக உள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் இப்போது பேக் டு த ரூட்ஸ் என்ற புத்தகத்தை லூக் காவ்டின்ஹோ என்பவரோடு இணைந்து எழுதியுள்ளார். இந்தியாவின் மரபான வாழ்க்கையின் மூலம் எப்படி நோய்களைத் தடுப்பது என்பது பற்றிய புத்தகமாக இது வெளிவர உள்ளதாக சொல்லப்படுகிறது.