செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (13:24 IST)

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்திவரும் ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் (49) கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் உருவத்தில் கருங்கல்லினாலான உருவச் சிலை அமைத்து,அவரது இல்லத்தில் அதற்கான தனி அறை அமைத்து , ரஜினி கோவில் என்ற பெயரில்,
நாள்தோறும் ரஜினிக்கு பால், தயிர், தேன் ,இளநீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜை நடத்தி பூஜித்து வருகிறார்.
 
தற்போது நவராத்திரி விழாவையொட்டி ரஜினியின் அபூர்வராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் உருவங்களை மரப்பலகையினாலும் களிமண் - னாலும் கொலு பொம்மைகளாக வடிவமைத்து,  பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.
 
மேலும் ரஜினியின் உடல் பூரண குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.