பியானோ வசிக்கும் ஏமி ஜாக்சனின் ஒரு வயது மகன் - கியூட் வீடியோ இதோ!

Papiksha Joseph| Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (20:19 IST)

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் இவருக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன் செல்ல மகன் ஆண்ட்ரியாஸ் கியூட்டாக பியானோ வாசிக்கும் அழகான வீடியோவை ரசித்து வெளியிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :