ரத்த வெள்ளத்தில் எமி ஜாக்சன். பீட்டா செய்த வேலையா?


sivalingam| Last Modified சனி, 10 ஜூன் 2017 (07:00 IST)
நாடெங்கும் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், போராட்டக்காரர்களை வெறுப்பேறும் வகையில் பீட்டா அவ்வப்போது சைவத்துக்கு மாறுங்கள் என்று விளம்பரம் செய்து வருகிறது. இதற்கு முன்னணி சினிமா நட்சத்திரங்களும் துணை போகின்றனர்.


 


அந்த வகையில் சமீபத்தில் பீட்டா அமைப்பின் விளம்பரம் ஒன்றில் 2.0 நாயகி எமிஜாக்சன் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் உடலில் பிளாஸ்டி பேப்ரால் ஆன ஆடையை அணிந்திருக்க, மெட்டல் ஹூக்குகளில் கறியை தொங்கவிடுவது போன்ற போஸில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வயிற்றில் ஹூக் குத்திய ரத்த வெள்ளத்தோடு நிற்கும் எமியின் ஹாட் போட்டேவிற்கு கீழே 'சைவத்திற்கு மாறுங்கள்' என்ற ஸ்லோகனும் கொடுக்கப்பட்டுள்ளது.

சைவத்துக்கு மாறுங்கள் என்று சாதாரணமாக சொல்லப்பட்டிருந்தாலும் மாட்டிறைச்சி விவகாரம் சூடு பிடித்துள்ள இந்த நிலையில் அதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விளம்பரம் வந்துள்ளதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் தன்னுடைய மேனி பளபளப்பு கூடியிருப்பதாக எமி ஜாக்சன் கூறுவது போல் இந்த விளம்பரம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :