1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (17:44 IST)

4 பெண்களின் வித்தியாசமான சூழ்நிலை: ‘கண்ணகி’ பட டிரைலர்..!

நான்கு பெண்களின் வித்தியாசமான சூழ்நிலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘கண்ணகி’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வித்யா பிரதீப், அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் மற்றும் ஷாலின் ஆகிய நான்கு பெண்களும் நான்கு வித்தியாசமான சூழ்நிலையில் உள்ளனர்.  பல மாப்பிள்ளைகள் வந்து பெண் பார்த்தும் திருமணம் ஆகாத அம்மு அபிராமி, திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் தனது கர்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தப்படுவது, திருமணம் என்பதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஷாலின் மற்றும் விவாகரத்து கேட்கும் கணவருக்கு மறுப்பு தெரிவிக்கும் வித்யா பிரதீப் என நான்கு முக்கிய கேரக்டர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. யஸ்வந்த் கிஷோர் இயக்கிய இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படம் பெண் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva