ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (17:41 IST)

அம்மன் வேடத்தில் தமன்னா: வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகை தமன்னா அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகை தமன்னா என்பதும் அவரது படங்கள் பல சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வாழை இலையில் உணவு சாப்பிடுவது போன்று உள்ளது
 
வாழையிலையில் உணவு சாப்பிட்டால் நாமே கடவுள் போன்று உணர்கிறோம் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட பலர் அம்மன் வேடத்தில் நடித்துள்ள நிலையிலும் அம்மன் வேடத்தில் திரைப்படத்தில் தமன்னாவும் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.