ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அமலாபால் அடுத்த படம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் நடித்துள்ள அடுத்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
விஜய் நடித்த தலைவா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவர் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் கேடவேர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது
இந்த நிலையில் இந்த படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது