திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:33 IST)

பெண்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும்: நடிகரின் சர்ச்சை பேச்சு

கடந்த 2006 ஆம் பெண்களை சபரிமலை கோயிலின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் கோயிலின் உள்ளே செல்லலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கபப்ட்டது. 
 
இந்த தீர்ப்புக்கு பலத்த ஆதரவு வந்தாலும், எதிர்ப்புகளும் வரத்தான் செய்தது. இந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி சபரிமலைக்கு வரும் பெண்களை குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே, திலீப் விவகாரத்தில் பேசி சர்சையை ஏற்படுத்திய இவர் தற்போது அடுத்து இவ்வாறு பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என பேசியுள்ளார்.