செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (19:44 IST)

“சேலையிலும் கிளாமரா இருக்காங்க அமலா பால்” – சுசி கணேசன்

அமலா பால், சேலையிலும் கிளாமராக இருப்பதாக இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.


 

 
சுசி கணேசன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘திருட்டுப் பயலே 2’. பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் நடித்துள்ள இந்தப் படம், 2006ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. பாபி சிம்ஹாவும், அமலா பாலும் நெருக்கமாக இருப்பது போன்ற இந்தப் படத்தின் போஸ்டரே பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
 
“இந்தப் படத்தின் ஹீரோயின் ஹோம்லியாகவும், அதேசமயம் கிளாமராகவும் இருக்க வேண்டும். சேலையிலும் கிளாமராக இருப்பார் அமலா பால் என்பதால் தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன். ஷூட்டிங்கின்போது அவர் டயலாக்கில் மலையாள வாசனை இருக்குமோ என்று பயந்தேன். ஆனால், கொஞ்சம் கூட மலையாள வாசனை கலக்காமல் பேசினார் அமலா பால்” என்று புகழ்கிறார் சுசி கணேசன்.