வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2017 (18:43 IST)

உச்சக்கட்ட கவர்ச்சியில் அமலாபால்; மழுப்பும் இயக்குநர்

அமலாபால் நடிக்கும் திருட்டு பயலே 2 படத்தை வேண்டுமென்ற கிளாமராக எடுக்கவில்லை என இயக்குநர் சுசி கணேசன் மழுப்பியுள்ளார்.


 

 
சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான திருட்டு பயலே திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் வெளியாக உள்ளது. 
 
இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படு வைரலானது. அதில் அமலாபால் படு கவர்ச்சியாக உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுசி கணேசன் கூறியதாவது:-
 
அமலாபால் இருக்கும் போஸ்டர் வெளியானவுடனே இணையதளத்தில் படுவேகமாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அந்தளவுக்கு அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது. நான் வேண்டுமென்றே படத்தை கிளாமராக எடுக்கவில்லை. கதைக்கு ஏற்றபடி அதுவாகவே இப்படி அமைந்துவிட்டது என்று மழுப்பியுள்ளார்.