1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (21:27 IST)

ஆல்யா மான்சாவின் குழந்தையுடன் கூடிய க்யூட் செல்பி

ஆல்யா மான்சாவின் குழந்தையுடன் கூடிய க்யூட் செல்பி
ராஜா ராணி என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆலியா மானசா. அவரது அபாரமான நடிப்பு அனைத்து தரப்பினரையும் குறிப்பாக குடும்பப் பெண்களை மிகவும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜா ராணி தொடரின் ஹீரோவாக, ஆலியா மானசா ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக், உண்மையான ஆல்யா மானசாவின் ஜோடியாகவே மாறினார். ஆம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் தனது குழந்தையுடன் அதிக நேரங்களை செலவிட்டு வரும் ஆலியா மானசா-சஞ்சீவ் கார்த்டிஹ்க் தம்பதிகள் அவ்வப்போது குழந்தையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ஆலியா மானசா தனது மகளுடன் எடுத்த சைலன்ட் செல்பி ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த செல்பியில் குழந்தை கொள்ளை அழகுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது