வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (22:31 IST)

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்  அல்லு அர்ஜூன் ஹாலிவுட்டில் நடிக்கவுள்ளார்.

 தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படம் வசூல் சாதனை படைத்தது.  இப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபல அமெரிக்க ஹாலிவுட் இயக்குனர் ஒருவரை நடிகர் அல்லு அர்ஜூன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதுகுறித்து விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.