1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2023 (11:54 IST)

Fraud காதலனால் கர்ப்பமான பாலிவுட் நடிகை - அம்பலமானதும் Abortion!

பாலிவுட் நடிகைகள் பலரை தன் வலைக்குள் சிக்க வைத்து அவர்களுக்கு கோடி கணக்கில் பணம், பரிசு பொருட்கள் என வாரி வாரி வழங்கி வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரை மயக்கி காதலித்து மோசடி செய்த விவகாரகம் அம்பலமாகியது.
 
சுகேஷ்  உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி என்றும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய உறவினர் என்றும் தெரிவித்து நடிகையுடன் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் சன் டி.வி உரிமையாளர் என்றும் கூறி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் நெருக்கமாக பழகி வந்தனர். 
 
நடிகைக்கு கோடி கணக்கில் பங்களா , கார் , லட்சத்தில் பரிசு பொருட்கள் என வாரி வரி வழங்கி அவரை வலைக்குள் சிக்கவைத்து கர்ப்பமாகியதாக பிரபல பாலிவுட் திரைவிமர்சகர் உமைர் சந்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பின்னர் சுகேஷின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்ததும் ஜாக்குலின் கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.