வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:21 IST)

''வேறொரு பெண்ணுடன் தொடர்பு''....2வது கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் குற்றச்சாட்டு

rocky chavanth
தன் 2வது கணவர் மீது பிரபல நடிகை ராக்கி சாவந்த் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழ் சினிமாவில் முத்திரை, கம்பீரம் ஆகிய படங்களில் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

இவர், 2022 ஆம் ஆண்டு துரானியை திருமணம் செய்து கொண்ட நிலையில், துரானிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறி பரப்பரப்பு ஏற்படுத்தினார்.

இதையடுத்து போலீஸில் அவர் போலீஸில் புகார் கூறியதை அடுத்து,  துரானியை கைது செய்தனர்.

இந்த நிலையில், துரானி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ராக்கி சாவந்த், தன் கணவர் அதி துரானி, தன்னை நிர்வாணப்படம் எடுத்து, அதைப் பணத்திற்காக விற்பனை செய்ததாகவும், இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.