என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது - மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு!
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் ,அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கார்த்தி, ஸ்ரீ திவ்யா,அர்விந்த் சுவாமி ,பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி.......
கல்யாணத்திற்கு பிறகு கோவையில் எனக்கு நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுதான். இந்த ஊருக்கும் எனக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கிறதோ, அந்த மாதிரியான விஷயத்தை மெய்யழகன் படமும் பேசும்.அதனால் இந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும். எங்களின் வேர்கள் உறவுகள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்,
அதனால்தான் படத்தின் நிகழ்ச்சியை இங்கு நடத்த வேண்டும் என்ற ஆசை என தெரிவித்தார்.
அதே போல மற்ற துணை நடிகர்கள்,பாடகர்கள் பேசும் போது இந்த படத்தில் ஜல்லிகட்டு மையமாக வைத்து எடுத்துள்ளதாகவும், கோவையின் கருப்பொருளைக் கொண்டு தஞ்சாவூரை சார்ந்து இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் இனி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் இந்தப் படத்தில் வரும் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் என தெரிவித்தனர்.