வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2022 (13:27 IST)

பெண் குழந்தை பெற்ற நடிகை ஆல்யா பட்! – திரையுலகினர் வாழ்த்து!

இந்தி நடிகை ஆல்யா பட்டிற்கும், ரன்பீர் கபூருக்கும் திருமணமான நிலையில் அவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், சமீபத்தில்தான் ஆல்யா பட்டின் வளைகாப்பு சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் ஆல்யா பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆல்யா பட் – ரன்பீர் கபூர் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பாலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited By Prasanth.K